Published On: Thursday, February 16, 2012
பாண்டிருப்பு பொதுநூலகத்தில் சிரமதானம், மரம் நடுகை
பாண்டிருப்பு பொது நூலகத்தில் வாழ்வியம் சனசமூக நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிரமதானம் மற்றும் மரம் நடுகை என்பன அண்மையில் நடைபெற்றது. சமாதானம் மற்றும் சமூகப்பணிகள் (PCA) அமைப்பின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்று இத்திட்டத்தை அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் டி.ராஜேந்திரன் ஆரம்பித்து வைத்தார். பிரித்தானிய கவுன்சிலின் “எக்டிவ் சிட்டிசன்” நிகழ்ச்சித் திட்டத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இச்சிரமதான வேலைத்திட்டத்தில் வாழ்வியம் சனசமூக நிலையத்தின் அங்கத்தவர்கள், ஊர் மக்கள் இச்சேவையில் கலந்து கொண்டனர்.