Published On: Monday, February 13, 2012
வில்லேந்திய 'கோச்சடையான்'

கோச்சடையானில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படத்தை(still) இன்று ரஜினியின் மகளும், இயக்குனருமான சௌந்தர்யா வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லேந்தி நிற்கிறார். இது முழுக்க பர்பார்மென்ஸ் கேப்சரிங் எனும் முறையில் வடிவமைக்கப்பட்ட(still) படமாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின்(still) முதல் வடிவமைப்பை வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
முதல் படம்(still) உண்மையான ரஜினியைக் கண்முன் நிறுத்தியது.

இப்போது வெளியாகியுள்ள படத்தில்(still) உள்ள ரஜினி அனிமேஷன் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கோச்சடையானில் சரத்குமார், நாஸர், ஜாக்கி ஷெராப், ருக்மினி உள்பட பலர் நடிக்கின்றனர். தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார், சௌந்தர்யாவின் இயக்கத்திற்கு மேற்பார்வை இயக்குனராக பணியாற்றுகிறார்.