Published On: Thursday, February 16, 2012
குதிரைப்பந்தயம் தொடர்பான வாய்த்தர்க்கத்தில் ஒருவர் குத்திக் கொலை

(கலாநெஞ்சன்)
குதிரைப்பந்தயம் தொடர்பாக இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு புதன்கிழமை 7.30 மணியளவில் நீர்கொழும்பு சாந்த ஜோசப் வீதியில் உள்ள குதிரைப்பந்தயம் பிடிக்கும் முகவர் நிலையம் அருகில் இடம்பெற்றது.
பேர்னாட் என்ற 50 வயதுடைய நபரே சம்பவத்தில் மரணமானவராவார். கொலை சம்பவம் தொடர்பாக விஸ்திரியன் மாவத்தையை சேர்ந்த நிசாந்த திலீப் உக்வத்த என்பவர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.