Published On: Friday, February 17, 2012
'டேலி' ஆங்கில புத்தகத்தை வெளியிட்ட சிம்புதேவன்

கணக்கு வழக்குகளை தயாரிப்பதில், எளிமையாக்குவதில் டேலி மென்பொருள் இந்திய அளவில் புகழ்பெற்றதாகும்.
இந்த டேலி மென்பொருளை கற்பிப்பதில் தமிழக அளவில் வல்லுநராக திரு.அ.கிருஷ்ணன் அவர்கள் திகழ்கிறார்கள்.
திரு.கிருஷ்ணன் அவர்கள் எழுதிய டேலி ஆங்கில புத்தகம் மற்றும் டேலி தமிழ் கற்பித்தல் டிவிடி தை மாதம் தயாரானது. இதனை என்னுடைய சாஃப்ட்வியூ பதிப்பகம் பிரசுரித்துள்ளது. இந்த டேலி ஆங்கில புத்தகத்தையும், டிவிடியையும் தமிழ்திரைப்பட இயக்குநர் சிம்புதேவன், வெளியிட நடிகை தாரிணி பெற்றுக்கொண்டார்கள்.
வெளியீட்டிற்கு பிறகு இயக்குநர் சிம்புதேவனும், நடிகை தாரிணியும் சாஃப்ட்வியூ விஸ்காம் மாணவர்களுக்கு தமிழ்த் திரையுலக அனுபவம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.