Published On: Friday, February 17, 2012
இறுதிக் கட்டத்தில் பில்லா-2

’மங்காத்தா’ வெற்றியை தொடர்ந்து அஜித்தின் ’பில்லா - 2’ இறுதி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று கொண்டிருக்கிறது என நம்ப தகுந்த வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
இன்னும் ஒரு சில படக்காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கபட வேண்டியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் சக்ரி டோலேடி எடுக்கும் படம் பில்லா 2 என்பது குறிபிடத்தக்கது.
படத்தின் இயக்குனர் சக்ரி டோலேடி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இசையமைப்பு பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் யுவனின் இசை படத்திற்கு நன்றாக வந்திருப்பதாக கூறுகிறார் இயக்குனர். படத்தின் கதாநாயகன் அஜித், கதாநாயகி பார்வதி ஓமனகுட்டன், ப்ருணா அப்துல்லா மற்றும் பலர் இப்படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.