Published On: Saturday, February 11, 2012
விலை அதிகரிப்பினால் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு படையெடுப்பு
(முஹம்மட் பிறவ்ஸ், றிம்ஸான்)
இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும்வகையில் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையிட்டு மக்கள் பழைய (குறைந்த) விலைக்கு எரிபொருட்களை நிரப்புவதற்காக பாரிய கொள்கலன்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் படையெடுத்து வருகின்றனர்.
கல்முனையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இன்றிரவு மக்கள் கொள்கலன்களுடன் படையெடுத்தனர். இதனால், கல்முனை பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு அதனைக் கட்டுப்படுத்த போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 'பெற்றோல் இல்லை' எனும் வாசகங்களும் காணப்பட்டன.