Published On: Saturday, February 11, 2012
இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 31 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 149 ரூபாவாகும். இதனிடையே, ஒரு லீற்றர் டீசலின் புதிய விலை 115 ரூபாவும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் புதிய விலை 110 ரூபாவாகும்.