Published On: Monday, February 27, 2012
ஜெனிவாவில் இலங்கைக்கு காயா? பழமா?
(எஸ்.எல். மன்சூர்)
உலக அரங்கில் இன்று(27.02.2012) இலங்கைக்கு முக்கியத்துவமிக்க நாள். மனித உரிமைகளுக்கான ஜ.நாவின் பேரவைக் கூட்டம் நடைபெறவிருக்கின்ற ஜெனிவா நகரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள மனித உரிமைகள் மீதான போக்கில் இலங்கைக்கு வெற்றிகிடைக்கவேண்டும் என்று நாடுதழுவிய ஆதரவான பேரலைகளும், உலக அரங்கில் இலங்கைக்கு வெற்றிக்கிடைக்கக்கூடாது என்கிற வகையில் எதிரான எதிர்ப்பலைகளும் மோதுகின்ற அதேவேளை நாட்டின் விலைவாசிக்கு எதிராக நடைபெற்று வருகின்ற ஆர்ப்பாட்டங்கள் ஒருபுறமும் நாட்டை எங்கே கொண்டுபோய்விடுமோ என்கிற அச்சத்தில் பலரும் பலவிதாக பேசிக் கொண்டிருக்க ஜெனிவாவில் இலங்கைக்கு காயா? பழமா கிடைக்கும் என்பதில்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி யோசிக்கப்படும் என்பது ஆய்வாளர்களது கருத்து.
இந்தியா, சீனா போன்ற நாடுகளின் தயவில் நம்பிக்கை கொண்டிருந்த இலங்கைக்கு நம்பிக்கை இழக்கும் வகையில் இந்திய கொழும்பு ஜெனிவா விவகாரம் தொடர்பாக விடுத்துள்ள கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில் என்ன செய்வது என்கிற ஆச்சரியமிக்க வியப்பில் ஆழ்ந்துள்ளன. உலகின் கழுகுக்கு கண்களுக்கு இலங்கைமீதான பார்வையில் மனித உரிமைகள் விடயத்தில் ஆச்;சரியமிக்கதான போக்கு காணப்படுவதற்கு பலதரப்பட்ட செயற்பாடுகள், இந்த உரிமை மீறல்களின் எதிர்விளைவான தாக்கத்திற்கு காரணமாக அமைந்திருந்தன என்பதுதான் யதார்த்தமாகும். இன்று அனைத்து விடயங்களிலும் மனித உரிமைகள் பற்றி பேசப்படுகின்றன. இந்த உரிமைகள் விடயத்தில் நாம் அதள பாதாளத்தில் நிற்கின்றோமா? என எண்ணத் தோன்றுகிறது. இன்றைய உலகில் மனித உரிமைகள் விடயத்தில் நாடுகளும்சரி, நிறுவனங்களும்சரி, தனிநபர்களும்சரி யாரை யார் வெல்வது என்பதில் போட்டா போட்டி போட்டுக்கொண்டு வாழத் தலைப்பட்டதன் விளைவு எங்கும் பிரச்சினை, எதிலும் பிரச்சினை இறுதியில் உயிர்களும், உடமைகளும் இல்லாதொழிந்து போகும் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்;ளப்பட்டுவிடுவதை அண்மையக்கால பல நிகழ்வுகளிலிருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
இன்று மனித உரிமைகள் பற்றி பட்டிதொட்டியொங்கும் பேசுகின்றனர், கதைக்கின்றனர் ஐ.நா. அமைப்பினால் கொண்டுவரப்பட்டு, நாடுகள் ஏற்றுக் கொண்ட மனித உரிமைகளில் பலவிடயங்கள் உண்டு. அவற்றில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், வாழும் உரிமை, அடிமையாக நடாத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை, சட்டத்தின் முன் யாவரும் சமம், சித்திரவதைக்கு, மனிதத்தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம், பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கு எல்லோருக்கும் உரித்து, குற்றச்சாட்டப்படுவோர் குற்றம் நிரூபிக்கும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை என பலவுண்டு. மேலும், மனித உரிமைகள் என்பது எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களுமாகும். மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக கருதப்படுகின்றன. இனம் சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல், உளசக்தி ஆகியவற்றுக்கப்பால் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கின்ற இந்த அடிப்படை உரிமைகள், மனிதர்கள் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகளுக்குள் அடங்குவதாகக் கருதப்படுகின்ற குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள் வாழும் உரிமை சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமமான நிலை, எங்கும் செல்லும் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பனவும் முக்கியத்துவமிக்கதாகக் காணப்படுகின்றன
ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே உரித்தாகவுள்ள அனைத்துலக ஒப்பந்தங்கள் பற்றிய உலகளாவிய வெளிப்பாடும் இதுவாகவே காணப்படுகிறது. இதில் முப்பது பிரிவுகள் உள்ளன. இவை பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்துலக ஒப்பந்தங்கள், பிரதேச மனித உரிமைகள் ஆவணங்கள், தேசிய அரசியலமைப்புச் சட்டங்கள், பிற சட்டங்கள் என்பனவை மூலம் விரிவாக்கப்பட்டு மனித உரிமைகள் அனைத்துலக சட்டவிதி, அனைத்துலக மனித உரிமைகள் சாற்றுரையையும், பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தம் ஆகிய ஆவணங்களையும் அதன் விருப்பத்தின்பேரில் கைக்கொள்ளக்கூடிய இரண்டுவகையான விதிகளைiயும் உள்ளடக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று உலகளாவிய ரீதியில் இனப்படுகொலைகள் கொலைவெறியாகவே உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இனப்படுகொலைகளைத் தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை (வுhந ஊழnஎநவெழைn ழn வாந Pசநஎநவெழைn யனெ Pரniளாஅநவெ ழக வாந ஊசiஅந ழக புநழெஉனைந) வரையறை செய்து தடைசெய்யும் உடன்படிக்கையானது உலகின் பல நாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்நாடுகளில் இன ஒழிப்பை தவிர்க்கவும், யுத்தகாலத்திலும், சமாதான காலத்திலும் இவற்றைத் கட்டாயம் கைக்கொள்ள வேண்டுமெனவும் 1951ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இதில் இலங்கையும் ஒப்பமிட்டுள்ளது. அதன்படி இனப்படுகொலைகளை புரிவது, ஒப்பந்தத்தை மீறும் செயலாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் சித்திரவதைக்கும், இதர கொடூரமான மனிதபிமானமற்ற முறையில் புரியப்படுகின்ற இழிவுபடுத்துகின்ற அல்லது தண்டனைகளுக்கு எதிரான ஒரு உடன்படிக்கையாக (ருnவைநன யேவழைளெ ஊழnஎநவெழைn யபயiளெவ வுழசவரசந யனெ ழுவாநச ஊசரநடஇ ஐnhரஅயn ழச னுநபசயனiபெ வுசநயவஅநவெ ழச Pரniளாஅநவெ) ஐ.நா. அமைப்பில் ஏற்று@க் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி சித்திரவதைகளைத் தவிர்க்கவும், சகல நாடுகளிலும் சித்திரவதைகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுவதுடன், வெளிநாட்டவரை அவர்களுடைய சொந்த நாடுகளில் அம்மக்கள் சித்திரவதைக்கு உள்ளாவார்கள் எனத்தெரிந்தால் அவர்களை திருப்பி அனுப்புவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையானது கடந்த 1987லிருந்து அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதேவேளை கடந்தகாலங்களில் உலகில் எத்தனையோ நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயங்களில் எல்லை மீறிப்போன சம்பவங்கள் பலவுண்டு. இதனையும் கருத்திற் கொள்ளவேண்டியது ஜநா. அமைப்பின் மனித உரிமைகளுக்குள்ள கடப்பாடாகும். இன்றைய மனித உரிமைகளுக்கான கூட்டத்தொடரில் இலங்கைக்கு விழப்போகின்ற அல்லது விழும் என எதிர்பார்க்கின்ற விடயங்கள் நாட்டு மக்களையும், நாட்டையும் பலத்த சவால்களுக்கு முகங்கொடுக்கும் என்பது அவதானிகளின் கருத்தாகும். அந்தவகையில், உள்நாட்டில் இன்று பொருளாதாத்தில் விழுந்த மிகப்பெரிய ஓட்டை எரிபொருள் விலையேற்றம் இதன் காரணமாக அரச உத்தியோகத்தர்களும், கீழ்தரமட்டத்திலுள்ளவர்களும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் இலங்கை மீதான ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் எதிர்கொள்வதானது இன்னும் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகக்கூடிய நிலையே தோற்றம் பெற்றுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சவால்களில் மிக முக்கியமானதுதான் இந்த உள்நாட்டு யுத்தம். இது பயங்கரவாதம் என்று அரசு கூறினாலும் தமிழ் மக்களாலும், சில ஐரோப்பிய நாடுகளில் இதற்கான பெயர் சுதந்திரத்திற்கான போராட்டமாக இருந்தாலும் இலங்கை அரசு அதனை முறியடித்து முற்றுப் புள்ளி வைத்திருந்தமையானது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியமையே உண்மையாகும். யுத்தத்தின்போது சுமார் 9ஆயிரம் பொதுமக்கள் இறந்துள்ளதாக அண்மையில் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில் இது பாரதூரமான விளைவையே கொண்டிருக்கும் என்பதில் கருத்துவேறுபாடு இருக்காது என்கிற ஒரு தோற்றப்பாட்டையும் எதிர்கொள்ளும் என்பதிலும் ஐயமில்லை.
அதேவேளையில் எல்லாவற்றுக்கும் தீர்வு காணும் நோக்கிலமைந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு அமுல்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் போக்கு கடுமையாக இருக்கும் பட்சத்தில் அது உள்நாட்டில் பாரிய சிக்கல்களைத் தோற்றுவிக்கும். சின்னஞ்சிறு நாடாகிய இலங்கை போன்ற நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகள் எதிர்க்கட்சிக்கும் வாய்க்கு ருசியான அவலாக மாறியுள்ள நிலையில் உலகை வெற்றி கொள்ளும் விடயத்தில் இலங்கை அரசு முன்வைக்கும் விடயங்களில்தான் தங்கியுள்ளது. அமெரிக்காவுடன் சேர்ந்து பலநாடுகள் அணிதிரளலாம். இதற்குக்காரணம் இலங்கை ஈரானிடம் உதவிபெறுகின்றமை, சீனாவுடன் கைகோத்துள்ளமை போன்றனவும் கூறப்பட்டாலும் உள்நாட்டு யுத்தம் முடிவுற்று ஆண்டுகள் இரண்டரை சென்றபின்னும் யுத்தம் நடைபெற்றவேளை இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் கசியத் தொடங்கியதும், அதற்கான தகுதிவாய்ந்த விசாரணைகள் முடுக்கிவிடப்படவில்லை என்றெல்லாம் உலகம் குற்றம் சாட்டுகின்றன. இவைகள்தான் இன்றைய கெடுபிடிக்கு காரணமாக அமைந்துள்ளமை குறிப்பான விடயமாகும்.
மேற்குலகமும், ஏனைய மனித உரிமைகள், மற்றும் சர்வதேச அமைப்புக்களும் இலங்கைமீதான நெருக்குதல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகளின் தொடருக்கு சரியான தீர்வுகள் காண முயற்சிக்கவில்லை என்பதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளின் கோரிக்கையாகும். இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக தீர்வை முன்வைக்கும் என்றிருந்த நாடுகளுக்கு ஏமாற்றமாய்ப் போய்விட்டது போலும் அத்துடன் சரியான அரசியல் ரீதியான தீர்வுகளும் இழுத்தடித்துக் கொண்டு வரும் போக்கு போன்றனவும் அமெரிக்காவை ஆத்திரமடைய வைத்திருக்கலாம். அனைத்திலுமே கைவைக்கும் அமெரிக்காவின் போக்குக்கு அதன் நேச நாடுகள் அனைத்தும் ஆமாப்போட்டு தலையாட்டும் பொம்மைகளாக காட்சிதருகின்றபோது இலங்கையின் நிலை குனிவைத்தான் ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்படப்போவது உள்நாட்டு மக்களேயாகும்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அமைச்சர் ஜி.எல். பீறிஸ் குழுவினர் சந்தித்து உரையாடிய போது நவநீதம் பிள்ளையோ தாம் தொலைவான தூரத்தில் இருப்பதாகக்கூறி வைவிரித்தும் விட்டார். இது கடந்த பலமாதங்களுக்கு முன்னர் இவ்வாறானதொரு மனித உரிமைகள் கூட்டத்தில் தப்பிப்பிழைத்துவந்த இலங்கைக்கு தற்போதைய கெடுபிடி பாரியதொரு பின்விளைவை ஏற்படுத்துமா? என்பதில்தான் உலகின் கவனம் திரும்பியுள்ளநிலையில் இலங்கைக்கு ஆதரவாக கடந்த வருடத்தில் 27நாடுகளின் உதவியுடன் பிரேரணையை கொண்டுவராது முறியடித்திருந்தமை நினைவிருக்கலாம். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளதைப் போன்று காணப்பட்டாலும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முக்கிய பொறுப்புக்கூறும் தமிழர் சார்பான முக்கிய கட்சியினர் ஜெனிவா செல்லாமையானது முக்கிய தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
அதேவேளை மாநாடு தொடர்பாக இலங்கையிலிருந்து சென்ற அமைச்சர்கள், ராஜதந்திர மட்டத்தில் வெற்றிவாய்ப்பைப் பெறக்கூடியவாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதேவேளை உள்நாட்டிலும், ஜெனிவா மாநகரத்திலும் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பலைகள், மக்களின் சகஜவாழ்வுக்கு குந்தகம் ஏற்படும் என்கிற நிலைமைகளைக் காரணம் காட்டி இலங்கை வெற்றி கொள்ள முயற்சிகள் சூட்சுமமானதாகவே தோன்றும். மனித உரிமைகள் விடயத்தில் சரியான போக்கை கடைப்பிடிப்பதில் உலக நாடுகள் அவதானமாக இருந்தாலும் யுத்தம் போன்ற அழிவுகளும், பயங்கரவாதத் தோற்றப்பாடுகளும் மனித உரிமைகள் விடயத்தில் சரியான போக்கை கடைப்பிடிப்பது என்பது கேள்விக்குறிய விடயமாகும். நாடு, நம்பிக்கை, நாட்டுப்பற்று போன்றவைகளில் இலங்கை மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தாலும் எதிர்க்கட்சியும்சரி, ஆளும் கட்சியும் சரி மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோது மக்களின் துயரையும், நம்பிக்கைகளையும் மேற்கொள்கின்றபோது அது யாவருக்கும் நலமாய் அமையும் என்பதில் குறியாய் இருப்பதற்கு இதுபோன்ற சர்வதேச சம்பவங்களும் எதிர்கொள்ளும் முறைகளையும் சரியான முறையில் திட்டமிட்டுக் கொள்வதிலும்தான் வெற்றிவாய்ப்பு கிட்டும். மேலும், மனித உரிமைகள் விடயம் மட்டுமல்ல எந்தவொரு விடயத்திலும் சரியான போக்கு காணப்படவேண்டும் என்பதைத்தான் இன்றைய ஜெனிவா கூட்டத்தொடர் உணர்த்தியுள்ளது. எனவே இனி நடக்கப்போகும் நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்றுள்ள இலங்கையின் போக்கும், அணுகும் முறைகளும், சாதுரியமிக்க ராஜதந்திர நடவடிக்கைகளும் ஜெனிவா விடயத்தில் காயா? பழமா என்பதை இன்னும் ஒருசில நாட்களுக்குள் தெரிந்துவிடும். அதுவரை விடயங்களைப் பொருந்திருந்து பார்ப்போம்.