Published On: Monday, February 27, 2012
கல்முனை மாட்டு வண்டில் தொழிலாளர்கள் மண் அகழ்வதற்காக கோரிக்கை
(நப்றிஸ்)
கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் மாட்டு வண்டி தொழில் செய்பவர்கள் கடல் மண் அகழ்வதை தடுக்கும் முகமாக, அடிக்கடி அவர்கள் பொலிசாரால் கைது செய்யப்படுவதும், தண்டப்பணம் கட்டுவதுமாக பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இவர்கள் அணைவரும் மண் அகழ்வதற்கு பயன்படுத்தும் இடமான சாய்ந்தமருது தோணா அமைந்துள்ள பகுதியில் கடல்வாய்ப்பகுதி அடிக்கடி மண் கூடுகின்ற (குமிகின்ற) பகுதியாகும். அதனை அகழ்வதன் மூலம் கடலிலுள்ள படகுகள் மிக இலகுவாக தோணாவுக்குள் உட்பிரவேசிக்க முடியும்.
இந்த விடயங்களை எடுத்துக்கூறி தமக்கு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமாவது மண் அகழ்வதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்து, எமது கஸ்ட நிலையைப் போக்குவதற்கு உதவுமாறு கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டு, தொழில் நுட்பக்கல்வி அமைச்சின் இணைப்பாளரும், தொழில் அதிபருமான ஏ.சி. யஹ்யாகானை சாய்ந்தமருது பிரதேசத்தின் வண்டித் தொழிலாளர் சங்கம் அவரது அலுவலகத்தில் சந்தித்து வேண்டிக் கொண்டது.
இதற்கமைய இணைப்பாளர் யஹ்யாகான் தனது கட்சித்தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களுடன் சங்கத்தினரை சந்திக்க வைத்து அதற்கான தீர்வினை மிகவிரைவில் அமைச்சர் ஊடாக பெற்றுத்தருவதாக வாக்குறிதியளித்தார்.
இவர்கள் அணைவரும் இந்த தொழில் மூலமே தமது குடும்பங்களை நடாத்தி வருகின்றனர். மாட்டு வண்டில்கள் மூலம் வேறு எந்தத்தொழிலும் செய்ய முடியாத நிலையில் குடும்பக்கஸ்டம் காரணமாக பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வரும் இவர்கள் தமது அன்றாட வாழ்க்கையை நடாத்துவதும் பெரும் கஸ்டமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.