Published On: Saturday, February 18, 2012
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்

(கலாநெஞ்சன்)
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று சனிக்கிழமை நீர்கொழும்பு பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் நீர்கொழும்பு நகர மத்தியில் கிரீன்ஸ் வீதியில் இடம்பெற்றது.
நீர்கொழும்பு கடோலகலே பிரதேசத்தில் வசிக்கும் மீனவ குடும்பங்களை சேர்ந்த பெண்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களாவர். சிலாபத்தில் அன்ரனி பெர்னாந்து என்ற மீனவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர்.
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பொருளாதார சுமை தாங்க முடியாத அளவு இருப்பதால் பெண்கள் என்ற ரீதியில் தங்களது எதிர்பை தெரிவிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குறிப்பிட்டனர்.


