Published On: Sunday, February 19, 2012
பிரபாகரனின் மரணத்தில் மகிழ்ந்த ராகுல் காந்தி - விக்கிலீக்ஸ்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்துக்காக காங்கிரஸ் கட்சி தலைமையின் ஒரு பிரிவினர் காத்து இருந்தனர் என்று அமெரிக்காவுக்கு தெரிய வந்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. பிரபாகரனின் மரணத்தைக் காண்கின்றமைக்கு ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைமையின் ஒரு பிரிவினர் காத்து இருந்தனர் என்றும் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்கு பழிவாங்க கறுவிக்கொண்டு இருந்தனர்.
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தயாநிதி மாறன் அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தார் என துணைத் தூதரகத்தில் இருந்து 2008ஆம் ஆண்டு நவம்பர் 03 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் உள்ளது. இதனால் இலங்கை விவகாரத்தில் காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கும் இடையில் பிளவு காணப்படுகின்றது என்றும் மாறன் சொல்லி இருக்கின்றாராம்.