Published On: Saturday, February 25, 2012
அம்மா வேடம் வேண்டாம்- மேக்னா ராஜ்

‘காதல் சொல்ல வந்தேன்’, ‘உயர்திரு 420’ படத்துக்கு பிறகு சரத்குமாருடன் நான் நடித்துள்ள ‘நரசிம்மன் ஐபிஎஸ்’ என்ற படம் வெளியாகிறது. இது மலையாளத்தில் ‘அச்சன்டே ஆண்மக்கள்’ என்ற பெயரில் உருவானது. கோவை போலீஸ் அதிகாரியாக சரத் நடிக்கிறார். டிஜிபி மகளாக கல்லூரி மாணவி வேடம் ஏற்கிறேன். கல்லூரியில் படிக்கும்போதே சரத்குமாரை காதலிக்கிறேன்.
பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது. அதன்பிறகு எங்கள் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பது கதை. 2 வயது குழந்தைக்கு தாயாக வேடம் ஏற்றிருக்கிறேன். ‘அம்மா வேடத்தில் நடிக்கிறீர்களே’ என்கிறார்கள். நடிகை என்றால் எல்லா பாத்திரத்திலும் தன்னை நிரூபிக்க வேண்டும்.
இதில் நடிப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2 வயது குழந்தைக்குத்தான் தாயாக நடிக்கிறேன். எந்த ஹீரோயினுக்கும் அம்மாவாக நடிக்கவில்லை, அப்படி நடிக்கவும் மாட்டேன். ஏனென்றால் நானே ஹீரோயின்தான். இப்படத்தை சந்திரசேகர் இயக்கி இருக்கிறார். ஜாஸிகிப்ட் இசை. அடுத்து ‘நந்தா நந்திதா’ வெளியாக உள்ளது