Published On: Saturday, February 25, 2012
ஹஜ் யாத்திரிகர்களுக்கான பதிவு மார்ச் 15ஆம் திகதி வரை நீடிப்பு

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்பவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளுவதற்கான காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார். இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுகின்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளுவதற்காக இம்மாதம் 29ஆம் திகதி வரையும் ஏற்கனவே காலம் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் பரவலாக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளைக் கவனத்தில் எடுத்தே ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லுகின்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளுவதற்கான காலம் மார்ச் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லுகின்றவர் களை முன்கூட்டியே பதிவு செய்வதற்கான வேலைத் திட்டமொன்றை இம்முறை அறிமுகப்படுத்தியுள்ளோம்.