Published On: Tuesday, February 28, 2012
சர்வதேசத்தில் இலங்கைக்கு சாதக நிலை - அமைச்சர் மஹிந்த சமரசிங்க

ஐநா மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் தான் ஆற்றிய உரையை அடுத்து இலங்கை குறித்து சாதக நிலை ஏற்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
உரையை அடுத்து பல நாடுகள் இலங்கையின் எதிர்கால திட்டங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் நிலையில் அது குறித்து ஐநா மனித உரிமை கூட்டத்தில் பிரேரணை சமர்பிப்பது அர்த்தமற்றது என பலர் அறிந்துள்ளதாக மஹிந்த சமரசிங்க கூறினார்.
ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள் மார்ச் 1ம் திகதி பகிரங்க விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் கருத்து வெளியிட நேரம் ஒதுக்கி கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை குறித்து சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தி வருவதாகவும் மேலும் சந்தேகம், வாதம் இருப்பின் நேருக்கு நேர் கேள்வி எழுப்பி நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.