Published On: Tuesday, February 28, 2012
முத்தரப்பு கிரிக்கட் தொடர்; துடுப்பாட்டத்தில் இலங்கை

சி.பீ கிண்ண முத்தரப்பு தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை துடுப்பெடுத்தாடி வருகிறது.
சி.பீ கிண்ண முத்தரப்பு தொடரின் இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய தில்ஷானும், ஜெயவர்தனேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
12 வது ஓவரின் முடிவில் இலங்கை அணி தனது முதல் விக்கட்டை இழந்தது. ஜெயவர்தனே 22 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, ஜடேஜா பந்துவீச்சில் ஷேவாக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
சற்றுமுன்பு வரை தில்ஷான், சங்ககாரா களத்தில் விளையாடி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி இலங்கை அணி 30 ஓவர்கள் முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 131ஓட்டங்கள் எடுத்துள்ளது.