Published On: Sunday, February 19, 2012
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் வாகன விபத்து
(நிதால்)
புதுக்குடியிருப்பு புத்தளம்-கொழும்பு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மீன்களை எடுத்துச் சென்ற லொறியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறி உதவியாளருக்கு சிறிய காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெயர் பலகைக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. வேறு எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

