Published On: Sunday, February 19, 2012
அம்பாறையில் 25 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதிகள்

(நிஸார் ஜமால்தீன்)
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் ஜெயிக்கா திட்டத்தின் நிதியில் அம்பாறை மாவட்டத்தில் ரூபா 25 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதிகளின் நிர்மாணப்பணிகள் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்காவின் அழைப்பின் பேரில் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ்வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை வைபவ ரீதியாக அங்குரார்ப்பனம் செய்துவைக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட திணைக்களத் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். தமண, உக்சிரிபுர பாடசாலை வீதி ரூபா 5 மில்லியன் செலவிலும், முஆங்கல உள் வீதி 9 மில்லியன் ரூபா செலவிலும், அம்பாறை நாமல் தலாவ வாய்க்கால் வீதி 8.3 மில்லியன் ரூபா செலவிலும் நிர்மாணிக்கப்படவுள்ளன.