Published On: Sunday, February 26, 2012
NO-1 நடிகையாக வர ஆசை இல்லை - தமன்னா

தமன்னாவுக்கு தெலுங்கில் ராச்சா, ரிபெல் என இரு படங்கள் கைவசம் உள்ளன. தமிழில் கடைசியாக நடித்த படம் வேங்கை. அதன் பிறகு தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லை. மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இந்தியிலும் வாய்ப்பு தேடுகிறார். தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-
வாழ்க்கையில் ஜெயிக்க நிறைய கனவு காண வேண்டும். வெற்றி பெறுவோம் என்றும் நம்ப வேண்டும். எல்லாவற்றுக்கும் ஆசைப்பட வேண்டும். ஆனால் பேராசை மட்டும் கூடவே கூடாது. பேராசை கேடு செய்யும். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்றும் ஆர்வப்படுகிறேன்.
அதற்காக நம்பர் ஒன் இடத்துக்கு வரவேண்டும் என்றெல்லாம் ஆசை கிடையாது. தமிழ், தெலுங்கில் நிறைய படங்கள் நடித்து விட்டேன். வெற்றியும் தோல்வியும் கிடைத்து விட்டது. இப்போது சினிமாவில் நிறைய பக்குவப்பட்டு விட்டேன். இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.

