Published On: Sunday, February 26, 2012
நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசை - ஸ்ரேயா

கவர்ச்சி ஆடையில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சர்ச்சைகளிலும் வழக்குகளிலும் சிக்கிய ஸ்ரேயா இப்போது அவற்றில் இருந்து விடுபட்டு அமைதியாய் இருக்கிறார். தெலுங்கு, ஆங்கில படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அனுபவ முதிர்ச்சியோடு தத்து வார்த்தமாக பேசினார். அவர் கூறியதாவது:-
காலம் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும். நேற்று போல் இன்று இருப்பது இல்லை. இன்று போல் நாளை இருப்பது இல்லை. என்னை பொறுத்தவரை, தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் திருப்தியான வேடங்களில் நடித்து முடித்து விட்டேன்.
ஆனாலும் முழுக்க காமெடி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது. எனக்கு பிடிக்காதது திகில் கதைகள் திகில் படங்களை நான் பார்ப்பதே இல்லை. அது போன்ற படங்களில் நடிக்கவும் மாட்டேன். பணம் கொடுத்து பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது போன்ற பயங்கர கதைகளை காட்டுவது உகந்தது இல்லை.