எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Wednesday, February 29, 2012

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஈரான், கட்டார், சவூதி, தாய்லாந்து உறுதி

Print Friendly and PDF


ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு, மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, கட்டார் ஈரான், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும் என பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட நாடுகளின் தலைவர்களை ஜெனீவா நகரில் வைத்து, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர் சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர், கட்டார் வெளிவிவகார அமைச்சர் கலீத் பின் முஹம்மத் அல்-அதீயா, மலேசிய வெளிநாட்டு அமைச்சர் ஹனீபா அமான், சவூதி அரேபியா அமைச்சர் பந்தர் பின் முஹம்மட் அல் அபான் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சலேஹி ஆகியோருடனே இலங்கை குழுவினர் பேச்சு நடத்தியதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார். இப்பேச்சுவார்த்தையில் இலங்கையில் யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சமாதான நடவடிக்கைகள், அபிவிருத்திப் பணிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452