Published On: Saturday, February 18, 2012
வடமேல் மாகாண அபிவிருத்திக்கு 2001 கோடி ரூபா ஒதுக்கீடு

(புத்தளம் செய்தியாளர்)
வடமேல் மாகாண அபிவிருத்திக்கென இரண்டாயிரத்து ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
2012ஆம் ஆண்டுக்காக வடமேல் மாகாணத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் வீதி அபிவிருத்தி திட்டங்களுக்கே கூடிய நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி, பணிகளுக்கு சுமார் 36 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது. சுகாதாரப் பணிகளுக்காக 33 கோடி ரூபாய்களும் அபிவிருத்திப் பணிகளுக்காக 29 கோடி ரூபாய்களும் ஒதுக்கிடப்பட்டுள்ளது.