Published On: Saturday, February 18, 2012
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு எக்ஸ் கதிர் இயந்திரம் வழங்கல்
(ஐ.எம்.பாயிஸ்)
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் 1.2 மில்லியன் பெறுமதியான தன்னியக்க எக்ஸ் கதிர் இயந்திரம் (X-ray Auto Process machine) வழங்கும் வைபவம் இன்று சனிக்கிழமை காலை மாவட்ட வைத்திய அதிகாரி மாகிர் தலைமையில் நடைபெற்றது. இதனை மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் இன்று வழங்கி வைத்தார்.
சுனாமியினால் முற்றாக அழிவடைந்தபின் பின்லாந்து ரெட் குரோஸ் அமைப்பினால் மிகவும் நவீனமாக அமைக்கப்பட்ட இவ்வைத்தியசாலையின் மிகவும் அவசியம் என உணரப்பட்ட இத்தேவை இன்று நிறைவு பெறுவதை இட்டு ஊர் மக்களும் மாவட்ட வைத்திய அதிகாரியும் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமது நன்றியினை தெரிவிக்கின்றனர்.
இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், வைத்தியசாலை விடுதி நலன் பேணும் நன்கொடையாளர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். கடந்த வருடம் தேசிய அளவில் சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட சிறந்த சேவையினை வழங்கும் தரத்தினை உடையை மாவட்டமட்ட வைத்தியசாலைகளுக்குள் நிந்தவூர் வைத்தியசாலை அகில இலங்கயில் இரண்டம் இடத்தினை பெற்றுக்கொண்டது. குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்காக துருவம் தனது நன்றியினை மாவட்ட வைத்திய அதிகாரிக்கும் சக உத்தியோகத்தர்களும் அபிவிருத்தி சங்கத்தினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.