Published On: Tuesday, February 28, 2012
சிம்புவுடன் நடிக்காதிங்க - த்ரிஷா

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் தான் வடசென்னை.இது வெற்றிமாறன் படம் தான்.
சிம்பு படம் இல்லை.ட்விட்டரில் இது சிம்பு படமா என ஒருவர் கேட்டதற்கு ”படத்தில் சிம்பு ஒரு நடிகர் அவ்வளவு தான்.ஹீரோவாக நடித்தால் படம் அவருடையதாகாது” என்று அந்த மனிதரை ஆட்டிவிட்டார் ஆடுகள இயக்குனர்.
இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ராணா நடிக்கவிருந்தார். த்ரிஷா இந்த படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வேகமாக பரவியதும்,ராணா இந்த படத்தில் நடிக்கவில்லை என்ற செய்தி அதிவேகமாக பரவியது. இந்த செய்தியை வெற்றிமாறன் ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.
இந்த இணைதலுக்கும் விலகலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்று தெலுங்கு பட உலகின் நண்பர்களிடம் கேட்டால் ராணாவும் த்ரிஷாவும் நெருக்கமான(!) நண்பர்கள் என்கிறார்கள்.
இந்த படத்தில் ராணா நடிக்காமல் போனதற்கு இந்த நட்பும் ஒரு காரணமாக இருக்குமோ? என நம்மிடமே கேள்விக் குறி வைக்கிறார்கள்.