Published On: Tuesday, February 28, 2012
ஆஞ்சநேயன்தான் என் கணவர் - அனன்யா

‘ஆஞ்சநேயன்தான் என் கணவர். எங்கள் திருமண தேதி விரைவில் முடிவாகும்’ என்றார் அனன்யா. ‘நாடோடிகள்’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனன்யா. இவருக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் இத்திருமணம் நடக்காது என்று தகவல் வெளியானது. இதை மறுத்த அனன்யா, ‘ஆஞ்சநேயனைத்தான் மணப்பேன்’ என்றார். அவர் மீண்டும் அதை உறுதி செய்து நேற்று அளித்த பேட்டி:
எங்களைப் பற்றி ஆதாரமில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். ஆஞ்சநேயன் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பதை என்னிடம் கூறி இருக்கிறார். என்னை ஏமாற்றவில்லை. இருவரும் விரும்பியே திருமணம் செய்ய முடிவு செய்தோம். பத்திரிகைகளில் வந்ததுபோல் அவருக்கு குழந்தைகள் கிடையாது. சிறந்த நணபரான அவருடன் என் உறவு உறுதியாக இருக்கிறது. ஆஞ்சநேயன் பெற்றோரும், என் பெற்றோரும் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விரைவில் திருமண தேதி முடிவாகும். எனக்கும் இதயம் இருக்கிறது. இதில் எங்கள் குடும்பம் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து நாங்கள் வேலைக்கு செல்ல வேண்டும். இதை மற்றவர்கள் மனதில் வைத்துக்கொண்டு எழுத வேண்டும். இப்போதுகூட மலையாள பட ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு அனன்யா கூறினார்.