Published On: Tuesday, February 07, 2012
நீர்கொழும்பு தமிழ் மொழிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்றப் பட்டியல்
(கலாநெஞ்சன்)
நீர்கொழும்பு கல்வி வலய தமிழ் மொழி பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலருக்கு உள்ளக இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பி. புஷ்பகுமார இடமாற்றல் பெற்றுள்ள ஆசிரியர்களின் பெயர்பட்டியல் அடங்கிய கடிதத்தை 31.1.2012 ஆம் திகதியிட்டு பாடசாலை அதிபர்கள் ஊடாக குறித்த ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதன்படி. நீர்கொழும்பு, கட்டானை கோட்டங்களில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளை சேர்ந்த 18 ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள்கள் மேன்முறையீட்டின் பின்னர் உறுதிசெய்து அனுப்பப்பட்டுள்ளன. நீர்கொழும்பு வலய தமிழ் மொழி பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோருக்கு முதல் தடவையாக இந்த வருடம் இடமாற்றல்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.