Published On: Monday, February 13, 2012
நஷீரை எதிர்த்தவருக்கு பதவி; புது அதிபர் ஹசன்

அதிபருக்கு எதிராக களத்தில் இறங்கியது. ராணுவம் தலையிட்டு போராட்டத்தை ஒடுக்கியது. இதையடுத்து, ராணுவ நிர்பந்தத்தால் நஷீத் பதவி விலகினார். துணை அதிபராக இருந்த முகமது வாகீத் ஹசன் புதிய அதிபரானார். தனது அரசை ராணுவம்தான் கவிழ்த்தது என்றும், உலக நாடுகள் இதில் தலையிட வேண்டும் என்றும் நஷீத் கூறினார். இந்நிலையில், புது அதிபர் ஹசன் தனது அமைச்சரவையை நேற்று விஸ்தரித்தார். புதிதாக 7 பேருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது.
இதில் முன்னாள் சர்வாதிகாரி அப்துல் கயூமின் ஆதரவாளர்களான அசீமா சாகூரு, முகமது ஹுசைன் செரீப் முண்டு ஆகியோரும் அடங்குவர். அசீமா அட்டர்னி ஜெனரலாக இருந்தவர். மாலத்தீவின் முதல் பெண் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதே போல், நஷீரை எதிர்த்து கைதான வக்கீல் முகமது ஜமீத் அகமதுவுக்கு உள்துறை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. அரசியல் குழப்பங்களுக்கு விடை கொடுக்கும் வகையில், பல்வேறு கட்சியினருக்கும் பதவி கொடுத்து, தேசிய அரசு போல் தனது அரசை மாற்றியுள்ளார் புது அதிபர் ஹசன்.