எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, February 13, 2012

இந்தியா 'டென்ஷன்' வெற்றி; அவுஸ்திரேலியாவுக்கு 'அடி'

Print Friendly and PDF


முத்தரப்பு தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, அவுஸ்திரேலியவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "டென்ஷன்' நிறைந்த கடைசி ஓவரில் மிகவும் "கூலாக' ஒரு சிக்சர் அடித்த கேப்டன் தோனி, வெற்றியை உறுதி செய்தார். காம்பிரும்(92) அசத்தினார். 
அவுஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. நேற்று அடிலெய்டில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மீண்டும் மோதின. 

சச்சின் இல்லை:
இந்திய அணியின் சுழற்சி முறை "பார்முலா'வின்படி சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பிரவீண் குமார் நீக்கப்பட்டார். பதிலுக்கு காம்பிர், உமேஷ் யாதவ் வாய்ப்பு பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் மைக்கேல் ஹசிக்கு ஓய்வு அளிக்கப்பட, பீட்டர் பாரஸ்ட் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், "பேட்டிங்' தேர்வு செய்தார்.

பாண்டிங் ஏமாற்றம்:
ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக இருந்தது. துவக்க வீரராக வந்த பாண்டிங்(6), வினய் குமார் "வேகத்தில்' வீழ்ந்தார். பின் வார்னர், மைக்கேல் கிளார்க் இணைந்து பவுண்டரிகளாக விளாசினார். ரோகித் சர்மாவின் துடிப்பான "பீல்டிங்கில்' வார்னர்(18) ரன் அவுட்டாக, நிம்மதி பிறந்தது. அடுத்து வந்த பாரஸ்ட், ரவிந்திர ஜடேஜா பந்தில் ஒரு சிக்சர் அடித்து மிரட்டினார். இந்த நேரத்தில் உமேஷ் யாதவ் பந்தில் கிளார்க்(38), "போல்டாக' திருப்புமுனை ஏற்பட்டது. 

அறிமுக அரைசதம்:
இதற்கு பின் பாரஸ்ட், டேவிட் ஹசி இணைந்து அசத்தினர். அஷ்வின் ஓவரில் ஹசி "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். அறிமுக போட்டியிலேயே முத்திரை பதித்த பாரஸ்ட், தனது முதலாவது அரைசதம் கடந்தார். இவர் 66 ரன்களுக்கு வெளியேறினார். பொறுப்பாக ஆடிய ஹசி(72), ஜாகிர் பந்தில் சேவக்கின் கலக்கல் "கேட்ச்சில்' அவுட்டானார். கிறிஸ்டியன் (39) ரன் அவுட்டானார். வேட்(16) பெரிதாக சோபிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது.

நல்ல துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சேவக், காம்பிர் இணைந்து வலுவான அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த நிலையில் சேவக்(20) அவுட்டானார். கோஹ்லி(18) ஏமாற்றினார். அடுத்து வந்த ரோகித் சர்மா "கம்பெனி' கொடுக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் காம்பிர். ஆஸ்திரேலிய அணியின் "பீல்டிங்' மோசமாக இருக்க, இவர்கள் எளிதாக ரன் சேர்த்தனர். ஸ்டார்க் பந்தை சிக்சருக்கு அனுப்பி நம்பிக்கை தந்தார் ரோகித் சர்மா. இவர் 33 ரன்களுக்கு ஹாரிஸ் "வேகத்தில்' பெவிலியன் திரும்பினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட காம்பிர்(92), சிறிது நேரத்தில் வெளியேற, சிக்கல் ஏற்பட்டது. 

தோகர்டி துல்லியம்:
ஆனாலும், ரெய்னா, தோனி இணைந்து துணிச்சலாக போராடினர். தோனி சிறிது மந்தமாக ஆடியதால், ரன் விகிதம் எகிறியது. தோகர்டி சுழலில் ஒரு "சூப்பர்' சிக்சர் அடித்த ரெய்னா(38), அவரது அடுத்த ஓவரில் போல்டானார். பின் 49வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய தோகர்டி, ரவிந்திர ஜடேஜாவை(12) வெளியேற்றியதோடு, 4 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுக்க, ஆட்டத்தில் சூடு பிடித்தது. 

"ஹீரோ' தோனி:
கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. மெக்கே பந்துவீசினார். முதல் பந்தில் அஷ்வின் ரன் எடுக்க தவற, "டென்ஷன்' ஏற்பட்டது. இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் தோனி ஒரு இமாலய சிக்சர்(112 மீ.,) அடித்து, பதட்டத்தை தணித்தார். நான்காவது பந்தை தோனி அடிக்க, அது எல்லைக் கோட்டுக்கு அருகே நின்ற "பீல்டர்' கையில் தஞ்சம் புகுந்தது. இதனை அம்பயர் "நோ-பால்' (இடுப்புக்கு மேல் உயரமாக வீசப்பட்டதால்) என அறிவிக்க, இந்தியா பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது. மீண்டும் வீசப்பட்ட இந்த பந்தில் தோனி 3 ரன்கள் எடுத்து, வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 49.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்து வென்றது. தோனி(44) அவுட்டாகாமல் இருந்தார். 
ஆட்ட நாயகன் விருதை காம்பிர் தட்டிச் சென்றார்

சிறந்த "சேஸ்'
ஆஸ்திரேலிய மண்ணில் நேற்று இந்திய அணி அதிகபட்ச ரன்களை(270) "சேஸ்' செய்து வென்றது. இதற்கு முன் 1986ல் பிரிஸ்பேனில் நியூசிலாந்துக்கு எதிராக 263 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 242 ரன்களை(2008, சிட்னி) "சேஸ்' செய்து இருந்தது.

முதல் வெற்றி
அடிலெய்டில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பெற்றது. இதற்கு முன் இங்கு நடந்த நான்கு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தான் வென்று இருந்தது.
* இம்முறை சச்சின் இடம் பெறாத நிலையிலும் இந்திய அணி வென்று காட்டியுள்ளது.

காம்பிர் 5வது வீரர்
சதத்தை நழுவவிட்ட காம்பிர்(92), ஆஸ்திரேலிய மண்ணில் 90களில் வெளியேறிய 5வது இந்திய வீரரானார். இப்பட்டியலில் ஸ்ரீகாந்த்(93, 1985), கவாஸ்கர்(92, 1986), அசார்(93, 1992), சச்சின்(91, 2008) உள்ளனர். 

யுவராஜ் நலம் பெற...
ஆட்ட நாயகன் விருது வென்ற காம்பிர் கூறுகையில்,""கேன்சர் பாதிப்பில் இருந்து யுவராஜ் விரைவில் நலம் பெற விரும்புகிறோம். அவரை நிறையவே "மிஸ்' பண்ணுகிறோம். தனிப்பட்ட முறையில் கேட்டால், 50வது ஓவர் வரை போட்டியை கொண்டு சென்றிருக்க கூடாது. 48வது ஓவரில் வென்று இருக்க வேண்டும்,''என்றார்.

மிகவும் "ஸ்பெஷல்' 
தோனி கூறுகையில்,""கடைசி ஓவரில் அடித்த சிக்சர் மிகவும் "ஸ்பெஷல்'. வெற்றிக்கு தேவை என்ற இக்கட்டான நேரத்தில் அடித்தேன். யுவராஜுக்கு சவால்கள் மிகவும் பிடிக்கும். தற்போதைய கேன்சர் சவாலில் இருந்து மீண்டு, வலுவான வீரராக வருவார்,''என்றார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452