Published On: Saturday, February 18, 2012
கோச்சடையானுக்கு கடும் போட்டி

ரஜினி நடிப்பில் ஒரு படம் பூஜை போடப்பட்டாலே அப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும்.
' கோச்சடையான் ' படமும் அதில் இருந்து தப்பவில்லை. ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ருக்மணி, ஜாக்கி ஷெரஃப் மற்றும் பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார்.
இப்படம் முழுவதுமே இந்தியாவில் முதன் முறையாக MOTION CAPTURE TECHNOLOGY மூலம் தயாராக இருக்கிறது. படத்தில் நடிப்பவர்களின் கை, இடுப்பு, கால் உள்ளிட்டவைகளின் அசைவுகள் MOTION CAPTURE செய்யப்படும்.
' கோச்சடையான் ' படத்திற்காக ரஜினியை தவிர மற்ற நடிகர், நடிகைகள் அனைவருக்கும் படப்பிடிப்பு முடித்துவிட்டார்கள். இறுதியாக ரஜினிக்கு எடுக்க இருக்கிறார்கள்.
எந்த ஏரியா உரிமை யாருக்கு என்ற போட்டி நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்குவதற்கும் கடும் போட்டி நிலவுகிறது.
தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஒருவர், டப்பிங் உரிமைக்கே 28 கோடிகளை கொடுக்க தயார் என்று தெரிவித்து இருக்கிறார். கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமை வியாபாரம் என்று பார்த்தால் இப்போதே வியாபாரம் 100 கோடியைத் தொடும் போலிருக்கிறது.