Published On: Sunday, February 26, 2012
அசின் 'டூ பீஸ்' உடையில் நடிக்கிறார்

வெல்ல மூட்டை மீது வேப்பெண்ணையை கொட்டிய மாதிரி அசினின் இமேஜ் மேல்பொல்லாப்பை கொட்டி தீர்க்கிறது மீடியா. அசின் மும்பைக்கு ரயில் ஏறிய நாளில் இருந்தே இந்த பொல்லாங்கு பூஜையை நடத்தி வருகிறார்கள் அவர்கள். அதிலும் குறிப்பாக மும்பை மீடியாவின் கோரப்பிடியில் சிக்கி சேதாரமாகிக் கொண்டிருக்கிறது அசினின் இமேஜ் ஒவ்வொரு நாளும்.
அதில் ஒன்றுதான் அவர் டூ பீஸ் உடையில் நடிக்கிறார் என்ற செய்தியும். சல்மான்கானுடன் அசின் நடித்து மும்பையிலிருக்கிற மற்ற ஹீரோயின்களை பெரும் புகைச்சலுக்கு ஆளாக்கினார். இப்போது அக்ஷய் குமாருடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதும் மறுபடியும் பொற்றாம கண்களோடு அவரை நோக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். இந்த டூ பீஸ் விவகாரமும் அவர்கள் கிளப்பிவிட்ட வதந்திதானோ என்று அஞ்சுகிற அளவுக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் திடுக்கிட்ட அசின், திட்டவட்டமாக இந்த செய்தியை மறுத்திருக்கிறார். அந்த படத்தில் நான் டூ பீஸ் உடையில் நடிக்கவில்லை. அப்படி நடித்திருப்பேன் என்ற ஆசையில் யாரும் அந்த படத்தை பார்க்க வரவேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் அசின்.

முதல் நாள் கலெக்ஷனே முடங்கிப் போகும் போலிருக்கே?