Published On: Sunday, February 26, 2012
கோச்சடையானில் 'நாகேஷ்' நடிக்கிறார்

இன்னும் கொஞ்ச நாளைக்கு கோச்சடையான் கோஷம்தான் ஒலிக்கப் போகிறது நாடுமுழுக்க. ஏனென்றால் இது ரஜினி படம். ஆடு புழுக்கை போடுவதற்கும், யானை விட்டை போடுவதற்கும் குறைந்த பட்சம் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்குமல்லவா?
அப்படிதான் கோச்சடையானும். இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் ஏக்கங்களும் ரசிகர்களை தூங்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல வெளியிடப்பட்ட ஒன்றிரண்டு ஸ்டில்களும் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நேரத்தில் படத்தை பற்றி வெளியான இன்னொரு செய்தி, அடங்கொப்புறானே என்று மேலும் ஆச்சர்யத்தை து£ண்டியிருக்கிறது. கோச்சடையானில் ஏராளமான கிராபிக்ஸ் யுக்திகள் பயன்படுத்தப்படவுள்ளன. அதில் மிக முக்கியமானது இதுதான்.
தமிழ்சினிமாவில் யாராலும் அடைய முடியாத சாதனையை படைத்துவிட்டு மறைந்த நாகேஷை நடிக்க வைக்கப் போகிறார்களாம். இறந்தவர் எப்படி நடிக்க முடியும்? கிராபிக்ஸ் உதவியுடன்தான்.
படத்தில் வரப்போகும் இரண்டு ரஜினிகளுக்கும் இரண்டு நாகேஷ் நண்பர்களாக வரப்போகிறார்களாம். அதில் ஒருவர் காதலிக்க நேரமில்லை நாகேஷ். இன்னொருவர் பஞ்ச தந்திரம் நாகேஷ். இதற்கான வேலைகளை கர்மசிரத்தையோடு செய்து கொண்டிருக்கிறார்களாம் கிராபிக்ஸ் வல்லுனர்கள். ஒருவேளை இது சர்வ திருப்தியாக அமைந்தால், சிவாஜியும் எம்ஜிஆரும் கூட ரஜினியுடன் இணைந்து நடிக்கக் கூடும்