Published On: Monday, February 06, 2012
அம்பாறையில் கடும் மழை; பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
(பி.எம்.எம்.ஏ.காதர்)
அம்பாறை மாவட்டத்தில் நேற்றிரவு பாரிய இடி, முழக்கத்துடன் கடும் மழை பெய்தது. கடந்த 24 மணித்தியாளத்துக்குள் அம்பாறை மாவட்டத்தில் 115.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. திடீரென பெய்த இம்மழையினால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இன்று கிழக்கு, ஊவா, வடமத்திய, வடக்கு மாகாணங்களில் இடையிடையே மழை பெய்வதுடன் சில இடங்களில் கூடிய மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாட்டின் ஏனைய இடங்களில் பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். இடி, மின்னலினால் ஏற்படும் சேதங்களை குறைத்துக்கொள்ளள முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை கையாளுமாறு வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
மருதமுனை கானடி வீதியிலுள்ள பல வீடுகள் மேற்படி மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை இங்கு காணலாம்.