Published On: Thursday, February 23, 2012
முகம் இல்லாமல் ஒரு பாடல்; தமிழ் சினிமாவுக்கு புதுசு

'ஆயிரம் முத்தங்கள் தேன்மொழி' படத்தில் இடம்பெறும் ஒரு பாடல், இதுவரை வந்தஎந்த உலக சினிமாவிலும் இடம் பெற்றிருக்க வாய்ப்பில்லை. 'இப்படி ஒரு ஐடியா எப்படிங்க வந்திச்சு?' என்று பத்திரிகையாளர் வளைத்து வளைத்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்படத்தின் டைரக்டர் சண்முகராஜிடம்.
அப்படியென்ன பிரமாதம் அதில்?
வேறொன்றுமில்லை. இப்படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றில் ஹீரோவும் ஹீரோயினும் டூயட் பாடுவார்கள். ஆனால் அவர்கள் தலை மட்டும் ஃபிரேமில் இருக்காது. முழு பாடலும் கழுத்துக்கு கீழேதான்! நினைத்து செய்தாரா, யதார்த்தமாக அமைந்ததா தெரியாது. இந்த சிந்தனைக்கு ஸ்பெஷல் அப்ளாஸ் வந்து கொண்டிருக்கிறது நாலாபுறத்திலிருந்தும்.