Published On: Thursday, February 16, 2012
மார்ச் 15 உடன் பேஸ்புக் மூடப்படும் என்பதில் உண்மையில்லை

(ஐ.எம்.பாயிஸ்)
பேஸ்புக் தமது சேவையை எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியுடன் நிறுத்தப் போகிறது எனும் செய்தி பரவலாக இனையத்தளங்கள் ஊடக பரப்பப்பட்டு வருகிறது. பேஸ்புக்கின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மார்க் சுசர்பெர்க் அவர்கள் தனது பழய வாழ்க்கைக்கு திரும்பப் போவதாகவும், இந்த மடத்தனமான தளத்துக்கு முடிவுகட்டப் போவதாகவும் கூறியதாக கூறப்படுகின்றது.
இதன் உண்மைநிலை கண்டறியும் முகமாக சி.என்.என். அதன் பணிப்பாளர் லாரி யுவை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு வினவிய போது, அவர் இதனை, ஒரு அபத்தமான புரளி என்று கூறியுள்ளார். அத்துடன் தாங்கள் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய உண்டு எனக் கூறியதுடன், இந்தப் பொய்யான அறிக்கை எம்முடன் இணைத்துக்கொள்ள மறுக்கப்பட்ட ஒரு இணையத்தளத்தினுடைய திட்டமிட்ட அறிவிப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
50 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஒரு நிறுவனம்தான் பேஸ்புக். அமெரிக்காவில் Google.com ஐ விட அதிகமாக மக்கள் பேஸ்புக்கைத்தான் பயன்படுத்துகிறார்கள். சுமார் 500 மில்லியன் உறப்பினர்களை கொண்ட இந்த சமூக வலைத்தளத்தில் 146 மில்லியன் பேர் அமெரிகர்களாகும்.