Published On: Friday, February 24, 2012
கன்னடத்தில் போலீஸ் அதிகாரியாக 'மச்சான்ஸ்'

பூ ஒன்று புயலாகலாம். புயல் ஒன்று சூறாவளியான கதைதான் இது. தமிழில் நல்லகதைக்காக வெயிட் பண்றேன் என்று எல்லா நடிகைகளும் சொல்வதை போல ஒரு பதிலை சொல்லிவிட்டு அண்டை மாநிலங்களில் 'அலசல்' போட்டுக் கொண்டிருக்கிறார் நமீதா. (ஷக்தி சிதம்பரம் இருக்கும்போது இந்த கவலை எதுங்குங்கக்கா...) மறுபடியும் இவர் தமிழில் நடிக்க வந்தால், வெரைட்டியான கேரக்டர் இருந்தால்தான் முடியுமாம்.
ஆனால் கன்னடத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் நமீ. அதுவும் விஜயசாந்தி டைப்பான கதை ஒன்றில். பவானி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சினேகாவுக்கு தமிழர்கள் கொடுத்த மெடல், நூறு கிராம் பேரீச்சம் பழத்துக்கு கூட ஆகவில்லை. அந்த புன்னகை முகத்தில் கோபத்தை காண சகிக்காத ரசிகர்கள் மேற்படி படத்தை ஒரேயடியாக நிராகரித்ததை நாம் அறிவோம்.
இந்த அலர்ட் சிக்னல் மனதில் அடித்த காரணத்தால்தானோ என்னவோ, தன்னால் அதிகம் நேசிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி கேரக்டரை தமிழில் செய்யாமல் கன்னடத்தில் ட்ரை பண்ணுகிறாராம் நமீதா.
முதல் நாள் படப்பிடிப்பில் இவரது டிபார்ட்மென்ட் யூனிபார்ம் கெட்டப்பை பார்த்து மேல் பட்டன் தெறிக்க மூச்சு வாங்கியதாம் ஒட்டுமொத்த யூனிட்டும். இருக்காதா பின்னே...