Published On: Tuesday, February 14, 2012
லிங்குசாமி தயாரிப்பில் 'தனுஷ்'

இயக்குனர் லிங்குசாமி தனது அண்ணன் சுபாஷ்சந்திர போஸ் உடன் இணைந்து 'திருப்பதி பிரதர்ஸ்' பேனரில் படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிறுவனம் 'வழக்கு எண் 18/9 ', 'கும்கி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இவ்விரண்டு படங்களையும் யுடிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.
மேலும், விஷால் நடிக்கும் அடுத்த படத்தினையும், 'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணன் இயக்க இருக்கும் அடுத்த படத்தினையும் தயாரிக்க இருக்கிறது.
சரவணன் இயக்க இருக்கும் படத்தின் நாயகனாக ஆர்யா நடிப்பார் என்று பேச்சுகள் நிலவின. ஆனால் இப்படத்தின் நாயகனாக நடிக்க இருக்கிறாராம் தனுஷ். இதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.