Published On: Tuesday, February 14, 2012
'ரூபி சிங்' தற்கொலையில் நடிகையின் நண்பர் கைது

மும்பையை அடுத்த கோரேகான் புறநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் போஜ்புரி நடிகை ரூபி சிங் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அப்போது தற்கொலைக்கு முன் நடிகை இந்தியில் எழுதிய கடிதத்தில் `தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை' என குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் போலீசார் இதுபற்றி மேலும் விசாரணையில் இறங்கினர்.
நடிகை தற்கொலை தொடர்பாக அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது நடிகை ரூபிசிங் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அவரது நெருங்கிய நண்பர் ஒருவரை சந்தித்தாக தெரிவித்தனர்.
அவர் தான் வீட்டு கதவை உடைத்து மின்விசிறியில் தொங்கிய நடிகையின் பிணத்தை படுக்கையில் போட்டதாக தெரிகிறது. அதன்அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது நடிகையின் தற்கொலை தொடர்பாக அவரிடம் பல்வேறு தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து, இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.