Published On: Monday, February 13, 2012
'நிஷாவுக்கு' உற்சாகமளித்த காஜல் அகர்வால்

சகோதரி நிஷா அகர்வாலுக்கு, காதல் காட்சிகளில் நடிப்பது பற்றி காஜல் அகர்வால் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தென்னிந்திய திரைப்படங்களில் உடன்பிறந்த சகோதரிகளான காஜல் அகர்வால், நிஷா அகர்வால் இருவரும் நட்சத்திர நாயகர்களுடன் நடித்துவருகிறார்கள்.
நாயகி காஜல்அகர்வால் சூர்யாவுடன் மாற்றான் மற்றும் விஜய்யுடன் துப்பாக்கி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் திரைத்துறையில் அறிமுகமாகி நடித்து வருகிற தன் சகோதரி நிஷாவுக்கு, காதல் காட்சிகளில் நடிப்பது பற்றி பாடம் நடத்தியுள்ளார்.
முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிக்கும் காஜல் அகர்வால், நாயகர்களுடன் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்து வருகிறார்.
ஆனால், இஷ்டம் படத்தில் நாயகன் விமலுடன் நடிக்கும் நிஷா முத்தக்காட்சியில் நடிக்க காஜல் யோசனைகளை தந்து உற்சாகப்படுத்தியுள்ளார்.
சகோதரி நிஷாவும், காஜலின் ஆலோசனைகளை செயற்படுத்திவருவதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.