Published On: Saturday, February 25, 2012
ஜெனீவாவுக்கு மற்றுமொரு இலங்கை பிரதிநிதிகள் குழு பயணம்

ஜெனீவாவில் நாளை மறுதினம் 27ஆம் திகதி மனித உரிமை கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை குழுவின் பிரதான தூதுக் குழுவில் பங்கெடுக்கும் வகையில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா இன்று அதிகாலை 2.15 மணியளவில் ஜக்கிய அரபு இராஜிய விமானத்தில் பயணமானார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேசம் சுமத்தும் குற்றங்கள் ஆதாரமற்றவையென தெரிவித்துள்ள சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மனித உரிமை மீறல் மாநாட்டில் இலங்கைப் பற்றிய நியாயங்களே அதிகமாகும் என்றும் புறப்படுவதற்கு முன்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பயங்கரவாதத்ததை ஒழித்து நாட்டில் சமாதான சூழலை ஏற்படுத்தியுள்ளார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத சர்வதேச சக்திகள் இட்டுக் கட்டப்பட்ட கதைகளை புணைந்து போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. இது அசத்தியம் என்பதால் அதற்கு எதிராக நியாயத்தின் பக்கம் பலமான ஆதாரங்களை எமது அரசு கொண்டுள்ளது என்றும் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முல்லைத்தீவு மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கனகரத்தினம் ஆகியோரடங்கிய குழுவினரே இன்று அதிகாலை ஜெனீவா பயணமானார்கள்.