Published On: Friday, February 10, 2012
இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 3-வது போட்டியில் அவுஸ்திரேலியாவும், இலங்கையும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா - அவுலியா - இலங்கை பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 4 போட்டிகளில் விளையாட வேண்டும்.
இதில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். இறுதிச் சுற்றில் 3 போட்டிகள் நடைபெறும். இதில் இரு போட்டிகளில் வெல்லும் அணி இத்தொடரில் சாம்பியன் ஆகும்.
இதுவரை இரு போட்டிகள் முடிந்துள்ளன. ஒன்றில் இந்தியாவை அவுஸ்திரேலியா வென்றது. மற்றொரு போட்டியில் இந்தியா இலங்கையை வீழ்த்தியது.
இந்நிலையில் அவுஸ்திரேலியா - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி இலங்கை அணிக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் அவுஸ்திரேலிய அணி உள்ளூரில் விளையாடுகிறது. மேலும் அந்த அணியின் பந்து வீச்சு பலமான துடுப்பாட்ட வரிசை கொண்ட இந்திய அணியையே திணறடிப்பதாக இருக்கிறது.
எனினும் இலங்கை அணியில் இளம் வீரர் தினேஷ் சண்டிமல், தில்ஷான், சங்ககரா, ஜெயவர்த்தனா என சிறப்பான துடுப்பாட்டக்காரர்கள் உள்ளனர். அவர்கள் அவுஸ்திரேலிய பந்து வீச்சை எப்படி எதிர்கொண்டு விளையாடுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இலங்கை அணியின் ரன் குவிப்பு அமையும்.
அவுஸ்திரேலிய அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ இல்லாவிட்டாலும், மிட்ஷெல் ஸ்ட்ராக், கிளின்ட் மெக்கே ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். சுழற்பந்து வீச்சில் சேவியர் டோஹர்தி இலங்கைக்கு நெருக்கடி அளிப்பார்.
பெர்த் கிரிக்கெட் மைதான வரலாறும் இலங்கைக்கு எதிராகவே உள்ளது. அவுஸ்திரேலியா - இலங்கை இடையே பெர்த் மைதானத்தில் 8 போட்டிகள் இதுவரை நடைபெற்றுள்ளன. இதில் ஒன்றில் கூட இலங்கை வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக பெர்த் மைதானத்தில் இலங்கை அணி 16 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 2 போட்டிகளில் மட்டும் இலங்கை வென்றுள்ளது.
அணி விவரம்
அவுஸ்திரேலியா: டேவிட் வார்னர், மேத்யூ வடே, ரிக்கி பாண்டிங், கிளார்க் (கேப்டன்), மைக் ஹசி, டேவிட் ஹசி/பீட்டர் ஃபாரஸ்ட், டேனியல் கிறிஸ்டியன், ரெயன் ஹாரிஸ், மிட்ஷெல் ஸ்ட்ராக், சேவியர் டோஹர்தி, கிளின்ட் மெக்கே.
இலங்கை: தில்ஷான், உபுல் தரங்கா, குமார் சங்ககரா, ஜெயவத்தனா (கேப்டன்), சண்டிமல், மேத்யூஸ், திரிமனே/ஹெரத், பெரைரா, குலசேகரா, மலிங்கா,