Published On: Friday, February 10, 2012
ஒருநாள் போட்டி; பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று நடக்கிறது.
நல்ல பார்மில் உள்ள பாகிஸ்தான் அணியில், முன்னாள் அணித்தலைவரும் ஆல் ரவுண்டருமான ஷாகித் அப்ரிடி மீண்டும் இடம் பெற்றுள்ளதால் கூடுதல் வலுவுடன் களமிறங்குகிறது.
ஷார்ஜாவில் இதுவரை 109 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அவற்றில் 75 போட்டிகளில் வென்றுள்ளது. அதே சமயம் நவ்ராஸ் மங்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி திறமையை நிரூபிக்கும் துடிப்புடன் உள்ளது.
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியுடன் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் மோதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது