Published On: Thursday, February 16, 2012
மகனால் கீழே தள்ளிவிடப்பட்ட தாய் மரணம்; ஜா-எலயில் சம்பவம்

மகனால் தள்ளிவிடப்பட்ட தாய் தரையில் விழுந்து உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவம் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜா-எலயில் நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜீத் ரோஹன தெரிவித்தார்.
தாயுக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றியதில் கோபமடைந்த மகன் தனது 70 வயதுடைய வயோதிப தாயை தள்ளி விட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தரையில் விழுந்த தாய் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மகனை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.