Published On: Tuesday, February 28, 2012
அரசுக்கு ஆதரவாக அக்கரைப்பற்றில் பாரிய ஆர்ப்பாட்டம்

(நப்றிஸ்)நடைபெற்ற ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கும், இலங்கையின் அதி மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் சதிகளுக்கும், பிரேரணைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, திங்கள் கிழமை காலை அக்கரைப்பற்றில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன அவர்களால் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, ஐ.நா. வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கொடும்பாவியும் ஆர்ப்பாட்டக்காறர்களால் எரிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலிருந்து ஆரம்பமான இவ் எதிர்;ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரத்தடி வரை சென்றதோடு, இப்பேரணியில் மூவினத்தையும் சேர்ந்த மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினரின் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அமைப்பாளர்கள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தினார்கள்.





