Published On: Monday, February 13, 2012
சாய்ந்தமருதில் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் க.பொ.த (சா/த) மாணவர்களுக்கு சமாதானம் மற்றும் சமூகப்பணிகள் (PCA) அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட கல்விக் கருத்தரங்கு அண்மையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் ஏ.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த இலவச கல்விக் கருத்தரங்கில் எம்.ஐ.மஜீட் வளவாளராக கலந்துகொண்டு விரிவுரையாற்றினார். பிரித்தானிய கவுன்சிலின் 'எக்டிவ் சிட்டிசன்' நிகழ்ச்சித் திட்டத்தின் அனுசரனையுடன் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.