Published On: Monday, February 13, 2012
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி கலந்துரையாடல்
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினருக்கும் கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் எம்.எஸ்.சுபையிருக்கும் இடையிலான கலந்துரையாடல் அமைச்சரின் ஏறாவூர் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வைத்தியசாலையின் ஆளனிப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்தல், உள்ளக அபிவிருத்தியினை மேற்கொள்ளல், எக்ஸ்றே சேவைப் பிரிவினை ஆரம்பித்து வைத்தல் மற்றும் வைத்தியசாலையின் 60ஆவது ஆண்டு வைர விழாவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யவிருக்கும் நிகழ்வுகள் என்பன பற்றி அமைச்சரிடம் வைத்தியசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் றியாத் ஏ. மஜீத் விரிவாக எடுத்துக் கூறினார்.
வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் அனைத்தும் எதிர்காலத்தில் நிறைவேற்றித் தரப்படும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் உறுதியளித்துள்ளதாக அபிவிருத்திச் சபை செயலாளர் றியாத் ஏ.மஜீத் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல். துல்கர் நஹீம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சபை பதில் உப தலைவர் எம்.ஆதம், உப செயலாளர் எம்.றாசீக், உறுப்பினர்களான ஏ.எல்.ஆப்தீன், எம்.ஐ.சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.