Published On: Friday, February 24, 2012
'பில்லா 2' ட்ரெய்லர் தயாராகிறது

ஒரு படத்தின் போஸ்டர் பரபரப்பாகப் பேசப்பட்டது இப்போதுதான். அஜீத்தின் பில்லா 2. போஸ்டரை பேச வைத்தவர்கள் ட்ரெய்லரை எப்படி கொண்டடு வருவார்கள் என்பதை அறிய அனைவருக்கும் ஆவல்.
சக்ரி டோலட்டி நடிப்பில் அஜீத் நடித்திருக்கும் பில்லா 2 படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. சில முக்கிய காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டுமாம். படத்தின் ட்ரெய்லரை தயாரிக்கும் பணி ஒருபுறம் நடந்து வருகிறது. அத்துடன் படத்தை எப்போது வெளியிடலாம் என தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச இருக்கிறார்கள்.
மாஸ் ஹீரோக்களின் படங்களை முக்கியமான தினங்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று சங்கம் கட்டுப்பாடு விதித்திருப்பதால்தான் இந்த பேச்சுவார்த்தை. படம் அனேகமாக அஜீத்தின் பிறந்ததினமான மே1 வெளியாகலாம்.

