Published On: Sunday, February 19, 2012
பெண்கள் விடுதி முன் நிர்வாண போஸ் ; நடிகர் கைது

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக் கழக பெண்கள் விடுதி முன்பாக நின்று நிர்வாண போஸ் கொடுத்த பிரபல மலையாள நகைச்சுவை நடிகரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மலையாளத்தில் ஏராளமான டிவி தொடர்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருப்பவர் மணிகண்டன் (28). சில மலையாள சினிமாவிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் காரில் திருவனந்தபுரம் காரிய வட்டம் பகுதியில் உள்ள கேரள பல்கலைக் கழக பெண்கள் விடுதி பகுதிக்கு வந்தார்.
அங்குள்ள காம்பவுண்டு சுவர் அருகே தனது காரை நிறுத்தியுள்ளார். பின்னர் சுவர் மேல் ஏறி தனது ஆடையை அவிழ்த்து நிர்வாணமாக நின்றுள்ளார். காரின் ஹெட்லைட்டையும் போட்டுள்ளார். 30 நிமிடங்களுக்கு மேலாக அவர் நிர்வாணமாக நின்றுள்ளார்.
பெண்கள் விடுதி அருகே நீண்ட நேரமாக கார் வெளிச்சத்தை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்களும், விடுதி காவலரும் வந்து பார்த்தபோது, நிர்வாண காட்சியை பார்த்து அதிர்ந்தனர். ஆட்களை பார்த்ததும் மணிகண்டன் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால், மக்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். பிறகுதான், அவர் சிரிப்பு நடிகர் மணிகண்டன் என அவர்களுக்கு தெரிந்தது.
விசாரணையில், இதுவரை 7 முறை இதுபோல பெண்கள் விடுதி முன்பாக நிர்வாண போஸ் கொடுத்திருப்பதாக மணிகண்டன் கூறினார். பெண்கள் விடுதி அருகே ஹெட்லைட் எரிந்தபடி அடிக்கடி நிற்பதை பலர் பார்த்துள்ளனர். ஆனால், அங்கு மணிகண்டன் நிர்வாணமாக நின்றுள்ளார் என்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணிடம் செயினை பறித்த சம்பவத்தில் இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.