Published On: Friday, February 24, 2012
சமரச முயற்சியில் இந்திய கிரிக்கட் வாரியம்

இந்திய கிரிக்கட் அணி வீரர்களான தோனி, ஷேவாக் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் தீவிர முயற்சியில் இந்திய கிரிக்கட் வாரியம் இறங்கியுள்ளது.
இந்திய கிரிக்கட் அணியில் எந்த பிளவும் இல்லை, எனவே அதுபற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை என்று கூறிக் கொண்டிருந்த இந்திய கிரிக்கட் வாரியம், தற்போது வீரர்களிடைய சமரசம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அணித்தலைவர் தோனி, ஷேவாக், பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் ஆகியோரிடம் இந்திய கிரிக்கட் வாரியச் செயலர் சஞ்சய் ஜகதேல் பேசியுள்ளார். அப்போது அனைவரும் ஒற்றுமையோடு அணியாக இணைந்து செயல்படுமாறு அவர் கூறியதாகத் தெரிகிறது.
மேலும் ஷேவாக், தோனி இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்து மூத்த வீரர்களிடையே பிளவு ஏதும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையாகவே உள்ளோம் என்று தெரிவிக்கவுள்ளதாக இந்திய கிரிக்கட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.