Published On: Wednesday, February 29, 2012
கார்த்திக்கு 'ஜிம்கானா கிளப்பில்' கட்டுப்பாடு

புதிதாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் பாண்டிச்சேரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினை தொடங்கி வைக்க, சென்னை - அண்ணாசாலை ஜிம்கானா கிளப்பிற்கு வந்த நடிகர் கார்த்தி மற்றும் சென்னை-வடபழனி கமலா திரையரங்கு உரிமையாளர் வி.என்.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் காலர் இல்லாத சட்டை அணிந்து வந்ததால் உள்ளே விட அனுமதி மறுத்து விட்டது கிளப்!
பின்னர் ரவுண்ட் நெக் டி-சர்ட் அணிந்து வந்த கார்த்திக்கு, அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் புதிதாக கேஷூவல் சட்டை ஒன்றை வாங்கி கொடுத்த விழாக்குழுவினர், அவரது காரிலேயே அந்த உடையை மாற்றிக் கொள்ளவும் செய்து விழா நடந்த ஹாலிற்கு அழைத்து வந்தனர். அதேமாதிரி கமலா சிதம்பரம், நடிகர் திலகம் சிவாஜி காலத்து ஆசாமி என்பதால் சிவாஜி ஸ்டைலில் சின்ன காலர் வைத்த சட்டை அணிவது வழக்கம். விழாவிற்கு வந்த அவரையும் பழம்பெருமை வாய்ந்த ஜிம்கானா கிளப் ஊழியர்கள் உள்ளே விட மறுத்து விட்டதால் அவரும், அவரது காரில் உடன் வந்த நண்பரின் சட்டையை வாங்கி அணிந்து கொண்டு இவரது சட்டையை அவருக்கு கொடுத்து விட்டு, சட்டையை காரிலேயே மாற்றிக் கொண்டு விழாவிற்கு வந்ததாக கூறி வருத்தப்பட்டார். மேலும் இது காந்தி பிறந்த தேசம் என ஞாபகப்படுத்தியதுடன், இனி இதுபோன்ற விழாக்களை சட்டயை கலட்டாத இடங்களில் நடத்தும்படி அன்பு வேண்டுகோள் விடுத்தது ஹைலைட்!