Published On: Wednesday, February 29, 2012
'கோச்சடையான்' பாடல் வாலியின் வரிகளில்

கோச்சடையான் படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகள் நாம் நினைப்பதைவிட வேகமாக நடந்து வருகின்றன. முக்கியமாக இசை.
ஏ.ஆர்.ரஹ்மான் கோச்சடையானுக்கு இசையமைக்கிறார். இவரது டியூன் கிடைக்க இப்போதெல்லாம் தவமிருக்க வேண்டும். ஹாலிவுட், பாலிவுட், தனி ஆல்பம் என்று இசைப்புயலுக்கு கரை ஒதுங்க நேரமில்லை, உலகமெல்லாம் வீசிக் கொண்டேயிருக்கிறது புயல்.
ஆனாலும் ரஜினி படமென்றால் விசேஷமில்லையா. படப்பிடிப்பு தொடங்கும் முன்பே வாலி வரிகளில் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்திருக்கிறார் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள். இந்தப் படத்தில் தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, கல்யாணி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.