எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Friday, February 24, 2012

அட்டாளைச்சேனையில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை

Print Friendly and PDF


(தென்கிழக்கு செய்தியாளர்) 
அட்டாளைச் சேனைப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக பல்வேறு கொள்ளைச் சம்பங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்றிரவு 23ஆம் திகதி அட்டாளைச்சேனை, டீன்ஸ் வீதியிலுள்ள நிஸார் என்பவரது வீட்டிலிருந்து சுமார் 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பணத்தையும் மற்றும் பல பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற அன்று, மாலை 7 மணியளவில் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று இரவு 10 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் அலங்கோலமாக காட்சியளித்ததைப் பார்த்த வீட்டார் தாம் வெளியே செல்வதை அவதானித்திருந்த சமயம் பார்த்து கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அலுமாரியையும் மற்றும் தளபாடங்களையும் புரட்டிவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தன்னிடமிருந்த உழவு இயந்திரத்தை விற்ற அன்றைய தினமே இச்சம்பவம் நடைபெற்றதாகவும் வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார். இது சம்பந்தமாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ததையடுத்து அடுத்து பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452